File களின் அளவுகள் எப்போதுமே எமக்கு பிரச்சினையான ஒரு விடயமாகவே இருக்கிறது. ஒரு கணினியில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதானாலும் சரி, இணையம் மூலம் Share பண்ணுவதானாலும் சரி, கூடிய அளவுள்ள File கள் பெரும் தலையிடியை கொடுக்கும். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு என்ன வழி?. இதற்காகவே வந்துள்ளது ஒரு மென்பொருள். KGB Archiver எனப்படும் இம் மென்பொருள் 1 GB அளவுள்ள File ஒன்றை 10 MB
அளவிற்கு குறைத்து Compress பண்ணுகிறது. இதனால் அதிக கொள்ளளவுள்ள File களையும் இலகுவாக பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.
அளவிற்கு குறைத்து Compress பண்ணுகிறது. இதனால் அதிக கொள்ளளவுள்ள File களையும் இலகுவாக பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.
முற்றுமுழுதாக இலவசமான இந்த மென்பொருள் Windows மற்றும் Linux ஆகிய இரு இயங்குதளங்களிலும் ஒத்துழைக்கிறது.
ஆனால் ஒரு சிறிய குறைபாடு. KGB Archiver மூலம் Compress பண்ணிய File ஒன்றை வேறு Compression மென்பொருட்களின் மூலம் Uncompress பண்ண முடியாது. KGB Archiver மூலமே Uncompress பண்ணமுடியும்.
Compression அளவுகளை உங்கள் விருப்பத்திற்கேற்ற முறையில் High, Maximum, Normal, Low, Very Weak என செட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்வதற்கு உங்கள் கணினி ஆகக்குறைந்தது
- 256 MB RAM
- 1.5 GHz Processor
ஆகிய தகுதியை கொண்டிருத்தல் அவசியம்.
அத்துடன் பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் File களை Compress பண்ணலாம். இதில் உள்ள இன்னுமொரு குறை வீடியோ Format களை Compress பண்ணமுடியாது.இம் மென்பொருளை தரவிறக்க KGB Archiver
No comments:
Post a Comment