”ஹக்கிங் அறிந்தும் அறியாமலும்” என்கிற இந்த தொடரில் ஹக்கிங் பற்றி நிறையவே எழுதப்போகிறேன். முக்கியமாக ஹக்கிங், ஹக்கேர்ஸ், ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள் என இன்னும் பல விடயங்களுடன் இத்தொடர் நீண்டு செல்லப்போகிறது. ஆனால் மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியிருக்கிறது, அதாவது ”ஹக்கிங் வழிமுறைகளும் அவற்றை தடுப்பதற்கான வழிவகைகள்”
என்னும் போது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹக்கிங் முறைகள் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு வழிகள் பற்றியதே என்பதை நினைவில் கொள்க.
என்னும் போது தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹக்கிங் முறைகள் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு வழிகள் பற்றியதே என்பதை நினைவில் கொள்க.
ஹக்கிங் என்றால் என்ன?
ஹேக்கிங் என்பது ஒரு வலையமைப்பிலோ அல்லது தனிநபர் இணையக் கணக்கிலோ உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது அல்லது தகவல்களை திருடுவது அல்லதுவிட்டால் கையகப்படுத்துவது.
ஹக்கிங் பற்றிய ஒரு சின்னதான அறிமுகத்தோட ஹக்கிங் உலகின் போராளிகளான ஹக்கேர்ஸ்(Hackers) பற்றி சற்று விரிவாகவே பார்க்கலாமே.ஆனாலும் இணைய உலகைப் பொறுத்த வரையில் இன்றைய கதாநாயகர்களும் இவர்கள்தான் வில்லன்களும் இவர்கள்தான்.
ஹக்கேர்ஸ் - Hackers
ஹக்கிங் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை ஹக்கேர்ஸ் என பொதுவாக எல்லோரும் அழைப்போம். ஆனாலும் அவர்களின் நோக்கம் அதாவது குறிக்கோள், செயற்பாடுகள்,மற்றும் திறமை போன்ற இன்னோரன்ன காரணங்களின் அடிப்படையில் அவர்கள் சமூகத்தால் வேறுபட்ட கண்களால் பார்க்கப்படுகிறார்கள். ஆக வெவ்வேறு முகங்களையுடைய ஹக்கேர்ஸ் பற்றி மேலே பார்க்கலாம்.
இன்றைய கணினிஉலகில் ஹக்கேர்ஸ்களில் பலவகையினர் உண்டு ஆயினும் அவர்களில் Black Hat Hackers, White Hat Hackers, Grey Hat Hackers ஆகிய பிரிவினரே முக்கியமானவர்கள்.
Types of Hackers
1.Black Hat Hackers- யார் இவர்கள்? ஹக்கேர்ஸ் உலகின் ஜாம்பவான்கள், மகா புத்திசாலிகள் ஆனால் துளியளவும் நல்லெண்ணம் இவர்களிடம் கிடையாது. இவர்களிடம் நிரம்பப்பெற்ற அறிவு முழுவதையுமே தீய நோக்கங்களுக்காக பயன்படுத்துவார்கள். சின்னதாக ஈமெயில் பாஸ்வேர்ட் திருட்டு தொடங்கி பாரிய வலையமைப்புகளை முடக்குதல் வரை அத்தனையும் இவர்களுக்கு அத்துப்படி.
இவர்களே பெரிதும் இணையத்தளங்களை முடக்குதல், மென்பொருள் க்ராக்கிங்(CRACKING SOFT WARES), வைரஸ்களை உருவாக்குதல், இணைய வங்கி, கடனட்டை மோசடிகளில் ஈடுபடல், தனிநபர் மற்றும் முக்கிய நிறுவனங்களின் இணையத்தளங்களிற்குள் புகுந்து தரவுகளை சேதப்படுத்தல் மற்றும் திருடுதல், இணையத்தளங்களின் சேவை வழங்கிகளான சேர்வர்களுக்குள் (SERVERS) ஊடுருவுதல் போன்ற பலவகையான தீய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் பிரதான நோக்கம் பிறரின் தகவல்களை திருடுவதும் அனுமதியின்றி அவற்றை கையாள்வதும்தான். இப்படியாக திறமையைப் பயன்படுத்தி சட்டவிரோத வழியில் பணம் பார்ப்பதே இவர்களின் வேலை.
2.White Hat Hackers- இவர்கள் ஹக்கேர்ஸ் உலகின் போராளிகள். இவர்கள் தங்களுடைய அறிவை நல்ல செயற்பாடுகளிற்காகவே உபயோகிப்பார்கள். மேலும் Black Hat Hackers ற்கு நேரெதிர் எண்ணம் கொண்டவர்கள்.இவர்களே சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹக்கேர்ஸ் ஆவர். இவர்களில் அனேகர் பெரிய பல நிறுவனங்களுடைய கணினி வலையமைப்புகளின் செக்கியூரிட்டி ஸ்பெசலிஸ்ட்(Security Specialist) ஆக வேலை பார்க்கிறார்கள். அன்ரி வைரஸ் மென்பொருள் தயாரிப்புகளில் இவர்களுடைய பங்கு அதிகமானது. இணைய வெளியைக் கலக்கிக் கொண்டிருக்கும் வைரஸ்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய புரோகிராம்கள் என்பவற்றிக்கு எதிராக போராடுவதே இவர்களின் வேலை.
3.Grey Hat Hackers- இவனுங்க ஒரு மார்க்கமான ஆளுங்க, அதாவது கடவுள் பாதி மிருகம் பாதி என்கிறமாதிரி. இவர்கள் ஹக்கிங்கை முழுநேரமாக எடுத்துக்கொள்வதில்லை. உரு வந்தாற்போல நேரம் கிடைக்கும் போது க்ராக்கிங்(CRACKING), டீகோடிங்( DECODING), வைரஸ் உருவாக்குதல், தகவல் திருட்டு போன்றவற்றில் தங்கள் கைவரிசையினை காட்டிவிடுவார்கள்.
இவர்களே ஹக்கேர்ஸ் உலகின் முக்கியமான பிரிவினர் ஆவர், இவர்களை விட ஏனைய சிலவகை ஹக்கேர்ஸ்களும் உண்டு. அவர்களையும் பார்க்கலாம்
Script kiddies – ஹக்கிங் பற்றிய ஆரம்ம அறிவைப்பெற முயற்சிப்போர் அதாவது பிகினேர்ஸ்.நம்ம ஆட்கள் பலரும் இந்தவகைதான் இவர்களிடம் ஹக்கிங் பற்றிய போதிய பயிற்சி கிடையாது. எவனோ ஒருவன் கிரியேட் செய்த அப்ளிகேசன்ஸ்,ரூல்ஸ் ஏதாவதொன்றை வைத்துக்கொண்டு ஹக்கிங் செய்ய முயற்சிப்பவர்கள் இந்த ரகம்.
Intermediate hackers- இவர்களுக்கு வலையமைப்பு, புரோகிராமிங் போன்றவற்றில் பாதி அறிவுண்டு. ஒரு புரோகிராமை உருவாக்கும் வல்லமை இருந்தாலும் பெரிதாக எதுவும் இவர்களால் செய்ய முடியாது. சின்னதான சில திருட்டுகளில் மட்டுமே இவர்களால் ஈடுபட முடியும்.அதாவது ஆபத்துக் குறைந்தவர்கள்.
Elite Hackers- இவர்களுக்கு ஹக்கிங் தொடர்பில் பூரண அறிவுண்டு. இவர்களும் அப்லிகேசன், ரூல்ஸ் போன்றவற்றை தாங்களாக உருவாக்குவதில்லை தான் . ஏனெனில் அவர்களின் திறமைக்கு இவற்றின் தேவைப்பாடுகள் எதுவும் இருக்கப்போவதில்லை. எந்த அப்ளிகேசன் உதவியுமின்றி தங்கள் திறமையாலேயே சாதிக்க கூடியவர்கள். ஹக்கேர்ஸ் உலகின் முடிசூடா மன்னர்கள்.
மேலும் Coders,Admins ரகத்தைச்சேர்ந்த ஹக்கேர்ஸ் என இப்பட்டியல் நீண்டு சென்றாலும் முக்கியமான ஹக்கேர்ஸ் பிரிவினர் இவர்களே.
இந்த பதிவில் ஹக்கிங் பற்றிய சின்னதாக ஒரு அறிமுகத்தோட, ஹக்கேர்ஸ் பற்றி சற்று விரிவாகவே பார்த்தோம். அடுத்த பதிவில் ஹக்கிங் பற்றிய இன்னுமொரு பயனுள்ள அவசியம் தெரியவேண்டிய விடயம் பற்றி பார்க்கலாம்.
Hacking = Creative Thinking + Different tools usage + Hard working
No comments:
Post a Comment