Friday, August 24, 2012

Computer வேகமாக Open ஆக வேண்டுமா ?


Microsoft Windows
உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். இதனாலேயே கம்ப்யூட்டர் தொடங்க தாமதமாகும். இதனை சரி செய்ய எந்த மென்பொருளும் தேவையில்லை.

Run Window வை திறந்து msconfig என Type செய்யவும்.

இப்போது விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்

இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.

குறிப்பு - AntiVirus போன்ற முக்கியமானது மட்டும் இருக்கட்டும். மற்றவைகளை Uncheck செய்து விடுங்கள்.
இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள். கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

No comments:

Post a Comment