Wednesday, May 30, 2012

பல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியமைப்​பதற்கு




இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.
இப்புகைப்படத்துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் அனேகமானவற்றில்
ஒவ்வொரு படங்களினதும் அளவை தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது.
இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இணைத்து அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும் புதிய மென்பொருள் உதவி புரிகின்றது.
இதன் கோப்பானது 9.5 MB என்ற சிறிய அளவு உடையதாக காணப்படுவதுடன் இலகுவாக 3 படிமுறைகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்.

No comments:

Post a Comment