Wednesday, May 30, 2012

உங்கள் Gmail மின்னஞ்சலை கோப்புகளாக சேமிக்க



உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமிக்க ஜிமெயில் மறைந்திருக்கும் வசதியைப் பற்றிய பதிவு இது.
உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை நீங்கள் கோப்புகளாக சேமிக்க முடியும்.  அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் உங்களின் அலுவலக தொடர்பான மின்னஞ்சல் தகவல்களை(E-mail data’s) நீங்கள் கோப்புகளாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


மின்னஞ்சல் தகவல்களை கோப்புகளாக  சேமிப்பது எப்படி? இதோ அதற்கான வழிமுறைகளையும், ஒவ்வொரு படியாக எளிமையாக விளக்கியிருக்கிறேன்.

  • முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள்.
  • பிறகு கீழ்க்கண்ட வழிமுறைகளின் சில மாற்றங்களை உங்கள் மின்னஞ்சல் செட்டிங்கில் செய்ய வேண்டியதிருக்கும்.
  • வலது மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்யுங்கள்..
  •  படத்தில் காட்டியுள்ளபடி கீழ்விரி பட்டி(மெனு) ஒன்று தோன்றும்.
  • அதில் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • gmail tips
அதன் பிறகு தோன்றும் விண்டோவில் Labs என்பதை கிளிக் செய்யவும்.
gmail tips
அதன்பிறகு அந்த பக்கத்தை கீழ்நகர்த்திப் பார்த்தால் Create a Document என்ற வசதி இருக்கும். அதில் Enable என்பதை கிளிக் தேர்வு செய்துகொள்ளுங்கள்(படத்தைப் பார்க்கவும்)
gmail tips
பிறகு பக்கத்தில் இறுதியில் இருக்கும் Save Changes என்பதை கிளிக் செய்து நீங்கள் மாற்றம் செய்த்தை சேமித்துக்கொள்ளுங்கள்.
gmail tips
சேமித்தவுடன், உடனடியாக உங்கள் ஜிமெயில் தானாவே Refresh ஆகி புதிய தொடக்கத்தை கொடுக்கும்.
gmail tips
முற்றிலும் புதிய தொடக்கம் முடிந்த பிறகு, உங்கள் மின்னஞ்சல் பக்கத்தில் More என்ற விருப்பம் இருக்கும்.
gmail tips
அதில் கிளிக் செய்தால் இவ்வாறு வரும். அதில் Create a document என்பதை கிளிக் செய்யவும்.
gmail tips
அதை கிளிக் செய்தவுடன் கூகிள் டாக்மென்ட்ஸ் – பக்கம் திறக்கும். அதில் File என்பதை கிளிக் செய்து அதிலுள்ள Download As என்பதை  கிளிக் செய்யும்போது கீழ்க்கண்ட விருப்பங்கள் தோன்றும்.
உங்களுக்கு வேண்டிய கோப்புவகைகளில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை சேமிக்க முடியும். நான் PDF என்னும் கோப்பு வகையில் சேமிக்கத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.
gmail tips
இதில் காணப்படும் PDF (போர்ட்டபிள் டாக்குமெண்ட் பார்மட்)அடோபி ரீடரில் திறக்க கூடியதாகவும்,  RTF என்பது வேர்பேட் பைலாகவும், Text என்பது நோட்பேட் பைலாகவும், word என்பது MS-office -ல் திறக்ககூடியதாக கோப்புகளாக சேமிக்கப்படும்.
அவ்வாறான மின்னஞ்சல்களை நாம் விரும்பிய வடிவில் கோப்புகளாக மாற்றிசேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment