இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி
பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.
Microsoft Download Manager என்ற இந்த மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது. இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம். மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் முடியும் (Pause downloading) பிறகு தேவைப்படுகிற போது மறுதொடக்கம் (Resume) செய்கிற வசதியும் இருக்கிறது.
இதில் எளிமையாக தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download என்பதைக் கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை காப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியும் தரப்பட்டுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்து விட்டால் போதுமானது.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதள அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
தரவிறக்கச்சுட்டி : Microsoft Download Manager
No comments:
Post a Comment