Wednesday, May 30, 2012

இணையத்தை அளவறிந்து பயன்படுத்த



இணையம் பயன்படுத்துபவர்களுக்கு உள்ள முக்கிய கவலை -கொடுத்துள்ள இலவச அளவினை விட அதிகமாக பதிவிறக்கம் செய்துவிடுவோமோ-பில் தொகை அதிகமாக வந்துவிடுமோ என்கின்ற கவலை உண்டு. அன்லிமிடட் பிளான் வைத்துகொண்டு டவுண்லோடு செய்பவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு….?அவர்கள் கவலையை போக்கவே இந்த
சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.  இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மொத்தம் 6 யுட்டிலிட்டிகள் உள்ளது
.நமது இணைய இணைப்பின் வேகம்-அப்லோடு மற்றும் டவுண்லோடு-மற்றும் அப்லோடு – டவுண்லோடு செய்கின்ற டேட்டா அளவு.எவ்வளவு நேரம் இணைய இணைப்பை பயன்படுத்தினோம் – மாதம பிறந்து இதுவரை எவ்வளவு முறை பயன்படுத்தினோம் – இன்று எவ்வளவு முறை இன்டர்நெட் ஆன்செய்தோம் என புள்ளி விவரமாக அறிந்துகொள்ளலாம்.இன்டர்நெட்டால் நமக்கு எவ்வளவு ரூபாய் செலவாகின்றது என்று அறிந்துகொள்ள இதில் சினன செட்டிங்(ஒரு எம்.பிக்கு எவ்வளவு ரூபாய் என்று) செய்துவிட்டால் போதும்.நமது ஐ.பி முகவரியை அறிந்துகொள்ளலாம்.எந்த வகை இணைப்பு என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.இதில் உள்ள தனி தனி யுட்டிலிட்டிகள் மூலம் இதுவரை எத்தனை முறை இணையத்தை பயன்படுத்தினீர்கள் – எவ்வளவு எம்.பிகள் இதுவரை பயன்படுத்திஉள்ளீர்கள். எவ்வளவு அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்துள்ளீர்கள் என அறிந்துகொள்ளலாம்.
இதில் டைரியும் உள்ளது. வேண்டிய பெயர்விவரம் -முகவரி – டெலிபோன் – இ-மெயில் – பிறந்த நாள் மற்றும் திருமண நாள் குறிதது வைததுக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
உலக நேரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எவ்வளவு எம்.பி.நாம் பதிவிறக்கம் செய்கின்றோம் – பதிவேற்றம் செய்கின்றோம் என்கின்ற விவரம் குறிக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

No comments:

Post a Comment