Wednesday, May 16, 2012

நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர்


கணினியின் திரையை அழகுபடுத்த யார் தான் விரும்புவதில்லை
அந்த வகையில் அழகான தரமிகுந்த 4 இலட்சத்திற்க்கும் மேலான
வால்பேப்பரை இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம் எப்படி என்பதைப்
பற்றிதான் இந்த பதிவு.

வால்பேப்பர் என்றால் சட்டென்று ஞாபகம் வருவது கணினியில் நாம்

வைத்திருக்கும் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகள், நம் புகைப்படம்
அல்லது இயற்கையான மரம் செடி கொடிகள் இதை தான் நாம்
வால்பேப்பராக வைத்திருப்போம். இதைபோன்று வால்பேப்பர்களை
கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் சில தளங்களில்
சென்று வால்பேப்பர் தரவிரக்கும் போது நம் கணினி வைரஸால்
தாக்கப்படலாம் அதுமட்டுமல்ல படங்களின் விளம்பரம் தான்
பெரிதாக இருக்கும் அதோடு படத்தில் தரமும் (குவாலிட்டி)
குறைவாகத்தான் இருக்கும் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும்
தீர்வாக நமக்கு ஒரு இணையதளம் வந்துள்ளது. இந்த தளத்திற்க்குச்
சென்று நாம் விரும்பும் வால்பேப்பரை இலவசமாக தரவிரக்கிக்
கொள்ளலாம் எல்லாமே எளிமையாக இருக்கிறது.
இணையதள முகவரி : http://wallbase.net

படத்தின் தரத்தையும் நாம் விரும்பும் வண்ணம் தரவிரக்கிக்
கொள்ளலாம். பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக
இருக்கும்.

No comments:

Post a Comment