மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக இமெயில் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை. நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடிரென்று உங்கள் ஜிமெயில்
கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம் (hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.
ஜிமெயில் சேவைக்கு சரியான கடவுச்சொல் வைத்தால் மட்டும் போதாது. மேலும் சில விசயங்களைச் செய்தும் சரியாக கவனித்தும் வந்தால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.
1. இணையதள முகவரியை சரிபாருங்கள்.
இணையத்திருடர்கள் ஜிமெயிலின் முகப்புப்பக்கம் போலவே செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் லாகின் செய்தவுடன் வேறொரு தளத்திற்கு இழுத்துச்சென்று உங்கள் தகவல்கள் திருடப்படலாம். எனவே https://gmail.com என்ற முகவரியில் தான் செல்கிறிர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
2. பொது இடங்களில் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
Keyloggers எனச் சொல்லப்படும் மென்பொருள்கள் நீங்கள் தட்டச்சிடும் போது எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு அதன் சர்வருக்கு உங்கள் தகவல்களை அனுப்பி விடும். எனவே உங்களுக்குத் தெரியாமல் இணைய செண்டர்களில் நிறுவப்பட்டிருந்தால் போயிற்று. எனவே முடிந்தவரை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள்.
3. இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு Forward செய்தல்.
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் உங்கள் மின்னஞ்சல்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு திருப்பி விட முடியும்.(Forwarding mails) . எனவே இரண்டாவது ஜிமெயில் ஒன்றை உருவாக்கி அதில் முதன்மை மெயில்கள் எல்லாமே வருகிற மாதிரி அமைக்கலாம். பொது இடங்களில் பயன்படுத்துகிற போது இரண்டாவது ஜிமெயில் கணக்கை உபயோகிக்கலாம். Settings -> Forwading and Pop/Imap
4. நாள்தோறும் ஜிமெயிலின் Account Activity கவனித்தல்.
Account Activity ஜிமெயிலின் சிறப்பான சேவை. இதன் மூலம் எந்தெந்த உலவியில் எந்த நேரத்தில் எந்தெந்த ஐபி அட்ரஸ்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரியும். ஒரே இடத்தில் பயன்படுத்தினால் ஒரே IP Address தான் இருக்கும். சந்தேகப்படுமாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் Sign out All other Sessions என்பதைக் கொடுத்து முறையாக வெளியேறுங்கள்.
5. தேவையில்லாத Filter இருக்கிறதா எனப் பாருங்கள்.
Filter மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல்களையோ அல்லது அனைத்து மின்னஞ்சல்களையோ Forward செய்தல், அழித்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.இதைப்பற்றிய ஒரு பதிவைப் பாருங்கள். http://www.rasoolibnugoya.blogspot.in/2012/05/blog-post_26.html
நீங்கள் ஜிமெயில் கணக்கிலிருந்து சரியாக வெளியேறாமல் இருந்திருக்கலாம். நண்பர்களே உங்களின் கடவுச்சொல்லை அறிய முயற்சிக்காமல் Filter என்பதைக் கொடுத்து விடலாம். இப்போது உங்களுக்கு வரும் எல்லா மெயில்களும் உங்கள் நண்பருக்கும் போகும். இது புது வகை. அதனால் தேவையில்லாத Filter இருக்கிறதா எனச் சரிபாருங்கள். Settings -> Filters
6. சந்தேகமான சுட்டிகளைக் கிளிக் செய்யாதிர்கள். (Links)
சில நேரம் உங்களுக்கு gmailteam@google.com இலிருந்து மெயில் வந்துள்ளது. உங்கள் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமானால் கீழே கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வரலாம். உங்கள் பாஸ்வேர்டைக் கேட்கும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதிர்கள். ஏனெனில் ஜிமெயில் இதுமாதிரி உங்களிடம் கேட்பதில்லை. பலவகையான ஏமாற்று மின்னஞ்சல்கள் இதைப் போல செயல்படுகின்றன.
7. உங்கள் கடவுச்சொல்லை வலிமையாக்குங்கள். (Password Strength)
உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளாவது இருக்கவேண்டும். கட்டாயம் எழுத்துகளில் எண்களையும் பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் எண், பெற்றொர் பெயர், உறவினர் பெயர் போன்றவற்றை வைக்காதிர்கள். கடவுச்சொல்லை எங்கேயும் எழுதவோ கணிணியில் குறித்தோ வைக்காதிர்கள்.
No comments:
Post a Comment