கணினி பயன்படுத்தும் அனைவரிடமும் டோரண்ட் ( Torrent ) என்ற வார்த்தையை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வார்கள் காரணம் மென்பொருள் முதல் சினிமா வரை, நாம் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைத்துமே இங்கு சென்று இலவசமாக தறவிரக்கிக்கொள்வது தான். இந்த டோரண்ட் கோப்புகளை நம் ஆண்டிராய்டு போனில் தறவிரக்க நமக்கு உதவி
செய்கிறது ஒரு இலவச மென்பொருள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தறவிரக்க முகவரி: https://market.android.com/details?id=com.utorrent.webசெய்கிறது ஒரு இலவச மென்பொருள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இத்தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் Install என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை நம் கணினியில் இலவசமாக தறவிரக்கி நம்முடைய ஆண்டிராய்டு போனில் நிறுவலாம், கூகிளில் நம் பயனாளர் கணக்கு பயன்படுத்தி எளிதாக தறவிரக்கலாம். தறவிரக்கியதை நம் போனில் நிறுவி தேவைப்படும் டோரண்ட் கோப்புகளை எளிதாக தறவிரக்கலாம். மின்னல் வேக இண்டர்நெட் இணைப்பும் இப்போது அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இருக்கிறது. டோரண்ட் கோப்புகளை எப்போதெல்லாம் தறவிரக்க வேண்டுமோ அப்போதெல்லாம் ஒரே சொடுக்கில் கணினி உதவி இல்லாமல் நம் மொபைல் போன் மூலம் எளிதாக தறவிரக்கலாம். கண்டிப்பாக ஆண்டிராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment