இந்தப்பதிவு.
துருப்பிடித்து கிடக்கும் நம்முடைய மூளைக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமல்ல , சிந்தனையை தூண்டும் ஒரு அரிய விளையாட்டான செஸ் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை குழந்தைகள் முதல் அனைவருக்கும் புரியும் வண்ணம் வீடியோவுடன் எடுத்துச் சொல்ல ஒரு தளம் உள்ளது .
இணையதள முகவரி : http://www.chesskid.com
குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை சொல்லி கொடுப்பதற்கு நேரம் இல்லையே என்று சொல்லும் அனைவருக்கும், உங்களின் குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டின் அடிப்படை பயிற்சியையும் அதற்கான நெளிவு சுளிவுகளையும் இத்தளம் தெளிவாக எடுத்து சொல்கிறது. குழந்தைகள், பெற்றோர் மற்றும் செஸ் பயிற்சிவிப்பாளர்கள் என மூவருக்கும் எப்படி திறமையாக விளையாடி ஜெயிக்கலாம் என்பதை வீடியோவுடன் காட்டுகிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நேரடியாக செஸ் விளையாடலாம் , நமக்கு நேரம் கிடைக்கும் போது இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்கலாம், இதுவரை நீங்கள் செஸ் விளையாடி பெற்ற மதிப்பெண்கள் என்ன என்பது வரை அத்தனையுமே காட்டுகிறது, ஓவ்வொரு நாளும் புதிதாக வெற்றி பெற்றவர்களின் வீடியோவும் நமக்கு காண கிடைக்கிறது. செஸ் விளையாடும் நண்பர்களுக்கும் இனி செஸ் விளையாட இருக்கும் குழந்தைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment