இந்தப்பதிவு.
வரலாறு முக்கியம் என்று எண்ணும் நமக்கு நம்முடைய பதிவுகள் அல்லது நமக்கு பிடித்தமான நண்பர்களின் பதிவுகளை PDF கோப்பாக மாற்றி சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் இதற்காக நாம் பல தளங்களை தேடிச்சென்றிருப்போம் ஆனால் பல தளங்கள் தமிழ் தளங்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் லட்டை பிச்சிப்போட்டது போல் எழுத்துக்களை காண்பிக்கும் ஆனால் இந்ததளம் ஒரு சில இடங்களைத் தவிர அதிகபட்சம் நன்றாகவே இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.sciweavers.org/free-online-html-to-pdf
இத்தளத்திற்கு சென்று URL என்று கொடுத்திருக்கும் கட்டத்திற்குள் நம் வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டும் அடுத்ததாக Option என்பதில் எந்த வகையான பேப்பர் நாம் பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தப்போகிறோம் என்பதையும் பக்கம் வண்ணக்கலரில் வேண்டுமா அல்லது Grayscale என்று சொல்லக்கூடிய கறுப்பு வெள்ளையாக இருந்தால் போதுமா என்பதையும் படங்கள் வேண்டாம் என்றால் No Image என்பதையும் Background படம் வேண்டாம் என்றால் No Background என்பதையும் தேர்ந்தெடுத்து
Convert என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு Low Quality -ல் Preview காட்டப்படும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Download PDF என்பதை சொடுக்கி பிடிஎப் கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம் பிரிண்ட் செய்ய விரும்புபவர்கள் PDF கோப்பில் இருந்து Print செய்து கொள்ளலாம். வரலாறு முக்கியம் என சொல்லும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment