Wednesday, May 16, 2012

செஸ் விளையாட்டு இனி இமெயிலில் இருந்து கொண்டே விளையாடலாம்.


கணினியில் விளையாட்டு விளையாட வேண்டும் என்றால் முன்பே அதற்கான விளையாட்டை நம் கணினியில் நிறுவி இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில விளையாட்டு இணைய தளங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விளையாட்டு விளையாட வேண்டும், ஆனால் இனி இமெயில் மூலம் செஸ் விளையாட்டு விளையாடலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
தினமும் ஒரு மாற்றம் தொழில்நுட்பத்தை பொருத்தவரை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று இமெயில் மூலம் செஸ் விளையாட்டு விளையாடலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://mailgames24.com/en-US/
இத்தளத்திற்கு சென்று Start Game என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயர் மற்றும் இமெயில் முகவரியை கொடுத்து அங்கு இருக்கும் Start game என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் சில நிமிடங்களில் விளையாட்டு நமக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டு விடும். அடுத்து நம் இமெயிலை திறந்து அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பார்த்து எங்கு நகர்த்த வேண்டுமொ அதற்கான Row மற்றும் Column -க்கு உண்டான எண்ணையும் தேர்ந்தெடுத்து Reply என்பதை சொடுக்கி அனுப்ப வேண்டும். உடனடியாக நமக்கு அடுத்த இமெயில் அடுத்த Move -ம் அதற்கு இணையான படமும் வரும். இப்படி இமெயில் மூலம் எளிதாக நாம் செஸ் விளையாடலாம். செஸ்  விளையாட்டு மற்றும் இல்லாமல் இத்தளத்தில் உள்ள அத்தனை விளையாட்டுகளும் இமெயில் மூலம் விளையாடலாம்.

No comments:

Post a Comment