எந்த ஒரு வேலை செய்தாலும் பணம் கிடைக்க கொஞ்ச நாளாவது ஆகும்
நேர்வழியில் உங்கள் கற்பனை திறன் மூலம் கோடி கோடியாக பணம்அள்ளலாம். பிக்காஸோ என்றால் நமக்கு தெரிந்தது அவர் ஒரு ஒவியர்
பல காலங்கள் வரை அவரை யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று அவர்
ஒவியம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது என்றால்
அது மிகையாகாது.அவரின் ஒவியம் $100 நூறு மில்லியன் டாலர்
விலைக்கு சென்றது பலருக்கும் தெரியும்.இவரைப் போல் நாமும்
ஒவியத்தால் சம்பாதிக்கலாம்.எனக்கு ஒவியம் வரையத்தெரியாது
என்கிறீர்களா ? எனக்கு ஒவியம் என்றால் என்னவென்றே தெரியாது
என்கிறிர்களா ? கவலையை விடுங்கள்.உங்களுக்காகவே ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதளமுகவரி: http://www.mrpicassohead.com
இந்த இணையதளத்திற்கு சென்று Play என்ற பட்டனை அழுத்தி
படம் வரைய ஆரம்பிக்கலாம் அடுத்து தோன்றும் பக்கத்தில் எந்த
முகஅமைப்பு வேண்டுமோ அந்த முகஅமைப்பை தேர்வு செய்து
இழுத்து வரைபலகையில் விடவும். வடிவத்தை பெரியதாக்க
”Scale up” என்பதையும் சிறியதாக்க ”Scale down ” என்பதையும்
வடிவத்தை திருப்ப ” Flip ” என்பதையும் இதைத் தவிர Rotate
மற்றும் Delete வசதியும் உள்ளது. மூக்கு , கண் ,வாய் ,முடி
என்று உங்கள் விருப்பபடி எதை வேண்டுமானாலும் தேர்வு
செய்து வரையலாம். வரைந்து முடித்த பின் Save என்ற பட்டனை
அழுத்தி சேமிக்கலாம்.
இமெயில் மூலம் உங்கள் நண்பருக்கு அனுப்பலாம். ஏதோ ஒரு
விளம்பரத்தை தினசரி பல மணி நேரம் கிளிக் செய்து பணம்
சம்பாதிக்கலாம் என்று என் சகோதரர்களை ஏமாற்றும் கும்பலிடம்
இருந்து அவர்களை பிரித்து சில நிமிடங்கள் மட்டுமே செலவு
செய்து உங்கள் கற்பனையால் ஒரு ஒவியத்தை இங்கு தீட்டி
அதை பிரிண்ட் செய்து ஒவியகண்காட்சியில் வையுங்கள்.
இலட்ச ரூபாய்க்கு கூடபோகலாம்.
No comments:
Post a Comment