என்றால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் சில
விளையாட்டுகள் நம் அறிவை மழுங்கடிக்கின்றன சில விளையாட்டுகள்
நம் மூளையை சுறுசுறுப்பாக மாற்றுகிறது அந்த வகையில் இன்று
நாம் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் நம் அறிவையும்
மேம்படுத்தும் வண்ணம் ஆயிரம் விளையாட்டுகள் அத்தனையும்
ஒரே இடத்தில் எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரமும் பொன்னாச்சே அதே போல்
தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின்
அறிவை வளர்க்கும் வண்ணம் ஆயிரம் சிறப்பான விளையாட்டுகள்
இந்த தளத்தில் உள்ளது.
இணையதளமுகவரி : http://www.abcya.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் விரும்பும் விளையாட்டை
தேர்வு செய்யலாம். கணிதத்தில் அறிவு குறைவாக இருக்கிறதா
அப்படிஎன்றால் கணித அறிவை மேம்படுத்தும் விளையாட்டை
தேர்வு செய்யலாம், ஆங்கில அறிவு குறைவு என்றால் ஆங்கிலம்
சம்பந்தமான விளையாட்டை விளையாடலாம். இதில் நாம்
தேர்ந்தெடுக்கும் எந்த விளையாட்டுக்கும் ரெஸிஸ்ட்ரேசன் தேவை
இல்லை. ஒவ்வொரு விளையாட்டும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு
உள்ளது. நாம் எந்த பகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்து
விளையாடலாம்.
No comments:
Post a Comment