Saturday, May 26, 2012

BSNL 2G லிருந்து 3G க்கும் 3G லிருந்து 2G க்கும் மாறுவது எப்படி?





BSNL நிறுவனத்தின் 3G இணைய சேவையை பயன்படுத்த புதிய சிம் 180 ருபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் 120 ருபாய்க்கு அழைப்புக்கான பேலன்ஸ் மற்றும் 200 Mb டேட்டா அளவுக்கு இணையப் பயன்பாடும் தரப்படுகிறது.

BSNL 2G -> BSNL 3G

உங்களிடம் ஏற்கனவே BSNL 2G சிம் இருப்பின்
அதிலிருந்து அப்படியே 3G சேவைக்கு மாறிக் கொள்ள முடியும். முதலில் உங்கள் மொபைல் போனில் 50 ருபாய் பேலன்ஸ் இருக்க வேண்டியது முக்கியம்.

பிறகு உங்கள் 3G மொபைல் போனிலிருந்து கீழ்க்கண்டவாறு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அனைத்தும் பெரிய எழுத்துகளில் இருக்க வேண்டும். (Capital Letters)

M3G –> 53733

சிறிது நேரத்தில் 3G க்கு மாறப் போவதை உறுதி செய்யும் குறுந்தகவல் உங்கள் மொபைலுக்கு வரும்.

பின்னர் மறுபடியும் M3GY என்று 53733 க்கு பதில் குறுந்தகவல் அனுப்பவும். குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து 3G சேவை ஆக்டிவேட் செய்யப் பட்டதற்கான வாழ்த்துகள் குறுந்தகவல் வரும். உங்கள் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்து விட்டு பார்த்தால் மொபைலில் 3G சேவைக்கான சிக்னல்கள் தெரியும்.

BSNL 3G -> BSNL 2G

உங்கள் மொபைலில் 3G தேவையில்லை, 2G சேவையே போதும் என்று நினைத்தால் அதற்கு கீழ்க்கண்டவாறு குறுந்தகவல் அனுப்பவும்.

M2G -> 53733

மறுபடியும் ஒரு தடவை Confirmation Message வந்தவுடன் கீழ்க்கண்டவாறு குறுந்தகவல் அனுப்பவும்.

M2GY -> 53733

பின்னர் உங்கள் சிம் 2G க்கு மாற்றப்பட்ட செய்தி வந்தவுடன் சுவிட்ச் ஆப் செய்து பயன்படுத்தவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1503 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 

No comments:

Post a Comment