Saturday, March 16, 2013

போல்டர் டிப்ஸ்


போல்டர் வியூ:
எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத்
தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.
போல்டர் திறந்து காட்டப்பட:
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று, அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில், ‘%windir%\explorer.exe’ என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\yourfolder’ என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து, நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.

No comments:

Post a Comment