உலக அளவில் எத்தனை சதவிகிதம் பேர் இன்டர்நெட்டில் உலா வருகிறார்கள்? எந்த நாட்டிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் அதன் மக்கள் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாடுகளுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை? இது போன்ற தகவல்களை, இது குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
இணையத்தைப் பயன்படுத்துவோரில் 35.6% பேர் ஆசிய நாட்டவர்களே.
ஒவ்வொரு மாதமும் 38 கோடியே 90 லட்சம் ஆசிய நாட்டவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். உலகின் மற்ற கண்டங்கள் மற்றும் பகுதிகளோடு ஒப்பிடுகையில், ஆசிய நாடுகளில் தான் அதிகமானவர்கள் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்காவில் 100க்கு 3 பேரும், ஆசியாவில் 10 பேரும், ஐரோப்பாவில் 38 பேரும், மத்திய கிழக்கு நாடுகளில் 10 பேரும், அமெரிக்காவில் 70 பேரும், ஆஸ்திரேலியாவில் 53 பேரும் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.உலக மொத்த மக்கள் தொகையில், 16.6% பேர் இணையத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இன்னும் 18 நாடுகளில் இணையம் நுழையவில்லை.வட கொரிய நாட்டில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அந்த அரசு தெரிவிக்கவில்லை.
5 கோடி பேரை இணையம் சென்றடைய 5 ஆண்டுகளே பிடித்தது. ஆனால், ரேடியோ விற்கு 38 ஆண்டுகள் ஆயின. தொலைக் காட்சி பெட்டி, இதற்கு எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 13.அமெரிக்காவில் இணையம் வழி வர்த்தகம் ஆண்டுக்கு 7% அதிகரித்து வருகிறது. இணையத்தில் மிக வேகமாக வளரும் பிரிவு சமுதாய வலைத் தளங்களாகும். இணையம் பயன்படுத்தும் உலக மக்களில், ஐந்தில் ஒருவர் தினந்தோறும் யு ட்யூப் தளத்தினைப் பார்வையிடுகிறார்.
சீனாவில், 2012 ஆம் ஆண்டில், இணையத்தைப் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் 5 கோடியே 10 லட்சம் பேர். 2011 ஆம் ஆண்டைக் காட்டிலும் 10% கூடுதலாக, 56 கோடியே 40 லட்சம் பேர், அங்கு இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அங்கு மொபைல் போன், டேப்ளட் பிசி மற்றும் பிற வயர்லெஸ் சாதனங்கள் வழியாக, இணையத்தினைப் பயன்படுத்துபவர்கள் 18.1% ஆக உயர்ந்துள்ளனர். மொத்தம் 42 கோடி பேர் இந்த வழிகளில் இணையத்தை வலம் வந்தனர்.
இதற்கிடையே இன்டெல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு, சில விந்தையான முடிவுகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் பெண்களில் ஐந்தில் ஒருவர், இணையப் பயன்பாடு பெண்களுக்கு ஒத்து வராதது என்று கருத்து கொண்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் இணையம் பயன்படுத்துவதை ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவில் சில சமுதாயங்களில், பெண்கள் தெருக்களில் தனியாக நடந்து செல்வதையே ஏற்றுக் கொள்வதில்லை என்றும், அதனாலேயே, இவர்கள் கடைவீதீகளில் இயங்கும் இணைய மையங்களுக்குச் சென்று வருவதில்லை என்ற உண்மையும் வெளியாகியுள்ளது. இது வளர்ந்து வரும் நாடுகளில், இணையத்தைப் பொறுத்தவரை ஆண், பெண்களிடையே பெருத்த வேறுபாட்டினை உருவாக்கியுள்ளது என்றும் இன்டெல் கருத்து தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment