கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புக்கள் தவறுதலாக அழிந்து விடுவதனால் சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுப்பதற்காக பல்வேறு Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் சொற்ப அளவே இலவசமாகக் கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் அவ்வாறு இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள் துல்லியமாக கோப்புக்களை மீட்டுத்தரும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
ஆனால் uFlysoft இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றதுடன் jpeg, png, gif, bmp, tiff, psd, tga, eps போன்ற ஏராளமான புகைப்படக் கோப்பு வகைகள் உட்பட avi, flv, mp4, mov, wmv, 3pg, mpg போன்ற வீடியோ கோப்புக்கள் மற்றும் mp3, wma, wav, ogg, flac போன்ற ஆடியோக் கோப்புக்களையும் துல்லியமாக மீட்டுத்தருகின்றது.
No comments:
Post a Comment