Tuesday, March 19, 2013

உங்களுடைய கணனியின் சிக்கல்களை தனாக சரி செய்யும் மென்பொருள்


நான் இன்றைக்கு எழுதப்போகும் பதிவு பற்றி ஏற்கனவே பலரும் அறிந்திருப்பீர்கள் , இருந்தாலும் புதிதாக கணணி வாங்கியுள்ள சகோதரர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை எழுதுகின்றேன்.


இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது Microsoft ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள
ஒரு அருமையான இலவச மென்பொருளை பற்றியாகும். உங்களுடைய கணனியில் ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக கீழே உள்ள இந்த Link ஐ Click செய்து Microsoft ன் இலவச பிரச்சினை தீர்வு மையத்திற்கு செல்லவும்.

பின் தோன்றும் விண்டோவில் Run Now என்பதை Click செய்து மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

Fix security Issues In Windiws Automatically

நிறுவியவுடன் கீழே உள்ளது போன்று ஒரு விண்டோ திறக்கும், அதில் Accept என்பதை Click செய்யவும்.

Accept Agreement

பின்னர் மற்றுமொரு விண்டோ திறக்கும், அதில் Detect Problems And Let Me Select The Fixes To Apply என்பதை Click செய்யவும்.

Detect problems and let me select the fixes to apply.

அவ்வளவுதான் மறுபடியும் ஒரு விண்டோ தோன்றும், அதில் உங்கள் கணனியில் உள்ள சரி செய்யப்பட்ட பிழைகளின் விவரங்களை காண்பிக்கும்.

கீழே இருப்பது எனது கணணியினுடையது, தற்போது எனது கணனியில் எந்த விதமான பிழைகளும் இல்லை. காரணம் நான் தற்போது பாவிக்கும் கணணிவாங்கி சுமார் 1 மாதங்களே ஆகும்.

My Computer Result


இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும். 

No comments:

Post a Comment