பாரா தொடக்க இடைவெளி
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து
சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்கக் கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.
Ctrl + M: கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து
கொடுக்கவும்.
Ctrl + Shift + M: கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடைவெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.
Ctrl + T:இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.
Ctrl + Shift + T: ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும்.
கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!

டேபிளில் பேக் ஸ்பேஸ் / டெலீட் கீகள்
வேர்டில் அட்டவணை ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதில் செல்கள், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை முற்றிலுமாக அழிக்க என்ன செய்கிறீர்கள்? அழிக்க வேண்டியதைத் தேர்ந்தெடுத்த பின்னர் டெலீட் கீயினை அழுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது? அழிய மறுக்கிறதா? இதற்குத்தான் மெனு வழி இருக்கிறதே. டேபிள் தேர்ந்தெடுத்து எந்த வகை வரிசையோ அதனைத் தேர்ந்தெடுத்து டெலீட் கொடுத்தால்தான் அழிந்துவிடுமே என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. ஆனால் இத்தனை படிகள் தாண்டவேண்டுமே என இன்னொருவர் கூறுவதும் கேட்கிறது.
இதற்கு மாற்று கீயாக (மருந்தாக) இன்னொரு கீ உள்ளது. அதுதான் பேக் ஸ்பேஸ் கீ. தேவையான வரிசைகளைத் தேர்ந்தெடுத்து பேக் ஸ்பேஸ் கீ அழுத்தினால் வரிசைகள் நீக்கப்படும். டேட்டா முதற்கொண்டு அனைத்தும் அழிந்துவிடும்.

No comments:
Post a Comment