கம்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் விதவிதமான போல்டர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு போல்டர்களும் டீபால்டாக ஒரே விதமான ஐகான் வைத்திருப்பார்கள். ஆனால் கம்யூட்டரிலேயே சில ஐகான் படங்களை கொடுத்திருப்பாரகள்.ஆனால் நாம் விரும்பும் புகைப்படங்களை நாம் ஐகான் படங்களாக கொண்டுவரலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு
பயன்படுகின்றது.8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்குகிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பயன்படுகின்றது.8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்குகிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் மேல்புறம் உங்களுக்கு நிறைய டேப்புகள் கொடுத்திருப்பார்கள். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
முதலில் நீங்கள் உங்கள் ஐ-கானுக்கான அளவு விண்டோவினை தேர்வு செய்துகொள்ளவும்.பின்னர் இதில் உங்கள் கம்யூட்டரில் உள்ள உங்களுடைய புகைப்படத்தினை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் வேறு புகைப்படங்கள் எடுக்க விரும்பபினாலும் நீங்கள் இதில் உள்ள கேப்ஸர் கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள பாக்ஸினை அட்ஜஸ்ட் செய்து தேவையான அளவினை தேர்வு செய்தபின் அதில் உள்ள டிக் மார்கினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோவாக இருந்தால் வீடியோவினை ஓடவிட்டு இதில் உள்ள ஸ்கீரீன்ஷாட் கிளிக் செய்து புகைப்படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம்.
அளவுகளில் மாற்றங்களோ பெயரோ கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள டூல்ஸ் வீண்டோவினை நீங்கள் பய்ன்படுததிக்கொள்ளலாம்.
அதன் கீழே உள்ள டூல்ஸ் விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் புகைப்படம் ரெடிசெய்துவிட்டீர்கள்.சுலபமாக எடுக்கும் இடத்தீல் அதனை சேவ் செய்துவிடுங்கள்.இப்போது பைல்மெனுவில் உள்ள இமேஜ் இம்போர்டிங் கிளிக் செய்யுங்கள்.இப்போது வரும் விண்டோவினை பாருங்கள்.
புகைப்படத்தின் முகம் மட்டும் எடுத்தால்தான் நமது ஐகான்கள் பார்க்க அழகாக இருக்கும். எனவே இதில் நான்காவதாக உள்ள டேபினை கிளிக் செய்தால் வரும் ஸ்டேன்டர்ட் அளவுகளில் நாம் நமது இமேஜினை ஸ்டேன்டர்டாக பெறலாம்.அல்லது நாம் விரும்புமாறு அளவு தேர்வு செய்ய இதில் மூன்றாவதாக உள்ள ஐகானினை கிளிக் செய்ய உங்களுக்கான படத்தின் அளவினை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம்.பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய படம் சிறுசிறு கட்டங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெறும். நீங்கள் மீண்டும் கிளிக் செய்து உங்கள் புகைப்பபடத்தினை எளிதில் எடுக்கும் வண்ணம் சேவ் செய்யுங்கள். புகைப்படம்மானது ஐகான் பைலாக சேவ் ஆவதை கவனியுங்கள்.இப்போது நமது புகைப்படத்துடன் கூடிய ஐகான் ரெடி. இதனை எவவாறு நமது கம்யூட்டரில் ஐ-கானாக மாற்றுவது. நீஙகள் உங்கள் கம்யூட்டரில ஏதாவது ஒரு போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள பிராபர்டீஸ் கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில் கஸ்டமைஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள சேஞ்ச் ஐகான் கிளிக் செய்ய வரும் விண்டோவில் உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஐகானை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.
ஓகே தாருங்கள். இப்போது உங்களுக்கான போல்டரில் சென்று பார்த்தால் போல்டர் ஐகானில் உங்களது படம் இடம் பெற்று இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் புகைப்படங்களையும் இவ்வாறு ஐகான்களாக மாற்றி பின்னர் அவர்கள் சம்பந்தமான பைல்களை அதில் போட்டுவிட்டால் எடுத்து பயன்படுத்த மிகவும் சுலபமாக இருக்கும்.
No comments:
Post a Comment