ஒன்றல்ல இரண்டல்ல 65 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடி பெறலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வளரும் தொழில்நுட்ப சாதனங்களால் எந்த இடத்தில் இருந்தும் ஒருவர் இபுக்படிக்கலாம் என்ற நிலை வந்த பின் மொபைல் மூலம் இபுத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதே சமயம் புத்தகங்களை தேடி நாளும் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது இப்படி புத்தகங்களை தேடும் நேரத்தை குறைப்பதற்காகவும் ஒரே இடத்தில் அத்தனை இ-புத்தகங்களை கொடுக்கவும் ஒரு தளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://pdfsb.com
இணைய உலகின் பல்வேறு தளங்களில் கிடைக்கும் இபுத்தகங்களை எல்லாம் நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடிப் பெறுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.PDF SB என்றால் PDF ” Search Books “. இத்தளத்திற்கு சென்று இருக்கும் கட்டத்திற்குள் புத்தகத்தின் பெயரை கொடுத்து தேடலாம், எல்லாவிதமான இபுத்தகங்களையும் ஒரே இடத்தில் இருந்து
எளிதாக தறவிரக்கலாம்.65 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை இத்தளம் தேடி நொடியில் கொடுக்கிறது. இபுத்தகம் படிக்கும் நம்மவர்களுக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம்.
No comments:
Post a Comment