என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்
கணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை
கொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும் எளிதான வகையில் தீர்வு
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்
கூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,
புரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை
செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று
சொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்
ஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது
இணையதள முகவரி : http://www.errorhelp.com
பிழை உதவி ( Error Help) இதைதான் மையமாக வைத்து இந்தத்தளம்
செயல்படுகிறது. மற்றதளங்களைப்போல அல்லாமல் பிரச்சினையை
நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக்
கொடுக்கின்றனர். இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி
உள்ளனர். எந்ததளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது
அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு
காட்டுகிறது, நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை
என்றால் 48 மணி நேரத்திற்க்குள் சரியான பதிலை கொடுக்க
முயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத்
தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே
காட்டுகின்றனர். கண்டிப்பாக இந்தத் தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment