பொருட்கள் எல்லாம் தேவை, எந்தெந்த நிறுவனங்கள் அந்த
பொருளை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய முழுத்
தகவல்களையும் நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக ஒரு வீடு வாங்கி குடியேற இருக்கிறோம் என்னென்ன
பொருட்கள் எல்லாம் அத்தியாவசிய தேவை எந்தெந்த
பொருட்கள் இருந்தால் வீடு அழகாகக இருக்கும், முன்னனியில்
இருக்கும் பொருட்களின் நிறுவனங்கள் என்னென்ன இப்படி
பலதரப்பட்ட தகவல்களையும் நமக்கு சொல்லி இந்தத்தளம்
உதவுகிறது.
இணையதள முகவரி : http://householdproducts.nlm.nih.gov
வீட்டிற்கு தேவையான பொருட்களை தனித்தனி வகையாக பிரித்து
கொடுத்து நம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டூத் பிரஷ் முதல்
வீட்டில் மாட்டும் படம் வரை இருசக்கர வாகனம் முதல் நான்கு
சக்கரவாகனம் வைத்திருப்பவர்கள் வரை என்னவெல்லாம் கொண்டு
செல்லவேண்டும், எந்த பொருட்கள் எந்த நிறுவனத்தில் தரமானதாக
கிடைக்கும் அதிகமான மக்கள் எந்த நிறுவனத்தின் பொருட்களை
வாங்குகின்றனர் என்ற அனைத்து தகவல்களும் நமக்கு நொடியில்
கிடைக்கும். இதே போல் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற
வேண்டும் என்றால் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான
பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது இந்ததளம். அடிக்கடி
மறதி ஏற்படும் நம் நண்பர்களுக்கும் வீட்டை அழகுபடுத்த
நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment