இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://diyornot.com
இத்தளத்திற்கு சென்று வீடு அழகுபடுத்தும் பிராஜெக்ட் என்றால் என்ன என்பதில் தொடங்கி பிராஜெக்ட் எப்படி செய்ய வேண்டும் , பிராஜெக்ட் -க்கு ஆகும் செலவு என்ன என்பது வரை அத்தனை தகவல்களையும் அள்ளி கொடுக்கிறது. சில முக்கிய பிராஜெக்ட்-களை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் புதிதாகத்தான் பிராஜெக்ட் செய்ய வேண்டும் என்று இல்லாமல் இருக்கும் இடத்தையே எப்படி அழகாக வைத்து கொள்ளலாம்,உதாரணமாக இந்தப்பொருள் இந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பல டிப்ஸ்-ம் அள்ளி கொடுக்கிறது. வீட்டிற்கு முன் ஒரு கார்டன் வைத்தால் நன்றாக இருக்கும் என்று என்னுபவர்கள் அதற்கு என்னென்ன தேவை , எவ்வளவு செலவாகும் போன்ற அத்தனை தகவல்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். சில வேலைகள் எளிதாக நாமே செய்யும் படி இருந்தால் சந்தோஷமாக நாமே செய்யாலம், எப்படி செய்ய வேண்டும் என்ற அத்தனை வழிமுறைகளையும் கொடுக்கும் இந்தத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment