Sunday, May 20, 2012

உங்கள் வீட்டு கார்டன் எப்படி இருக்க வேண்டும் நீங்களே வடிவமைத்து பார்க்கலாம்.


நம் வீட்டு தோட்டம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று
ஆன்லைன் மூலம்  நாமே வடிவமைத்து பார்க்கலாம். எந்த செடி
எங்கு வைக்கலாம் எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்ற
பல கேள்விகளுக்கும் விடையளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது

இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
எவ்வளவு பெரிய பதிவி வகித்தாலும் நம் வீட்டு செடிகளை
பராமரிப்பதற்கும் நேரம் ஒதுக்கும் பெரிய மனிதர்கள் இன்றும்
இருக்கின்றனர், வீட்டின் முகப்பில் இருந்து தோட்டம் வரை
எந்த செடிகள் வைத்தால் அழகாக இருக்கும். இந்தச்செடி எந்த
மண்ணில் வேகமாக வளரும் போன்ற பல தகவல்களை
கொண்டு நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://gardenpuzzle.com/projects/redesign/new
இந்தத்தளத்திற்கு சென்று நம் வீட்டின் முகப்பு படத்தை அப்லோட்
செய்து எந்தெந்த செடிகள், மரங்கள் எங்கு வைத்தால் நன்றாக
இருக்கும் என்று பார்க்கலாம். வலது பக்கம் செடிகள் மரங்கள் என
அனைத்தும் இருக்கின்றது, இதில் நமக்கு பிடித்த மரம் மற்றும் செடி
போன்றவற்றை சொடுக்கி நாம் வடிவமைக்கும் தோட்டத்துக்கு
கொண்டு வரலாம். எல்லாம் வடிவமைத்து முடித்தபின் நம்
கணினியில் சேமித்தும் வைக்கலாம். வீட்டுத்தோட்டத்தை
அழகுபடுத்த நினைக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment