பிடிஎப் கோப்புகளில் உள்ள பக்கங்களை சேர்ப்பதற்கு , குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் பிரிப்பதற்கு மற்றும் பிடிஎப் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு என அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி :http://foxyutils.com
இத்தளத்திற்கு சென்று Merge pdf , Split Pdf, Unlock Pdf, Protect Pdf என்று இருக்கும் பல வகையான சேவைகளில், பிடிஎப் கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும், பிடிஎப் கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும், பிடிஎப் கோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf என்பதையும் சொடுக்கி சேவைகளை பெறலாம்.ஒவ்வொரு முறை பிடிஎப் சேவை செய்வதற்கு முன்பும் பிடிஎப் கோப்புகளை Browse என்ற பொத்தானை சொடுக்கி பதிவேற்றிய பின்பு தான் எல்லா சேவைகளையும் பெறமுடியும். கண்டிப்பாக PDF கோப்புகளை எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment