Sunday, May 20, 2012

புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.


ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

விளம்பரத்தை சொடுக்கினால் போதும் மாதம் இவ்வளவு பணம் என்று
ஏமாற்றும் பல கும்பல்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். கணினியில் புரோகிராம் எழுத்தெரியுமா ? உங்கள் புரோகிராம்கள் விலை போகாமல் இருக்கிறதா ? இனி எந்த கவலையும் வேண்டாம் உங்கள் புரோகிராம்களை எளிதாக ஆன்லைன் மூலம் விற்று பணம் சம்பாதிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.binpress.com
ஆன்லைன் மூலம் கணினித்துறையில் இருக்கும் பல நண்பர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று  இமெயில் மூலம் நம்மிடம் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்தப்பதிவு இருக்கும். கணினி மொழிகளில் உங்களுக்கு எந்த மொழி தெரிந்தாலும் அந்த மொழியில் நீங்கள் எழுதும் புரோகிராம் Code -ஐ வாங்க  பல பேர் காத்திருக்கின்றனர். C முதல் VB வரை , ஜாவா முதல் ஆண்டிராய்டு வரை , C# முதல் PHp  வரை உங்கள் புரோகிராமை ஆன்லைன் மூலம் இத்தளத்தில் விற்பனைக்கு வைக்கலாம்.  விலையையும் நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம். நாம் உருவாக்கிய புரோகிராம் தேவைப்படும்  நபர்கள் ஆன்லைன் மூலம் தேடி நம் புரோகிராம் அவர்களுக்கு பிடித்திருந்தால் நாம் தெரிவித்துள்ள பணத்தை செலுத்தி நம் புரோகிராமை வாங்கிக்கொள்கின்றனர். இப்போது அதிகமாக ஆண்டிராய்டு அப்ளிகேசன் தொடர்பான புரோகிராம்களை பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இத்தளத்தில் சென்று தேடி பலரது புரோகிராம்களை வாங்குகின்றனர் என்பதும் கூடுதல் செய்தி. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் புரோகிராமையும் விற்பனை செய்யலாம்.  ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment