நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும். இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே
வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.