ஜிமெயில் கணக்கில் உங்களுக்கு Paypal மற்றும் eBay போன்ற பண பரிவர்த்தனை செய்ய உதவும் தளங்களிலிருந்து, வரும் மின்னஞ்சல்கள் உண்மையாகவே அந்த தளத்திலிருந்துதான் வருகிறது என்று எப்படி நம்ப முடியும்?
இப்படி உங்களுக்கு வந்த மின்னஞ்சலில் உள்ள சுட்டிக்கு சென்று, உங்கள் கணக்கு விவரங்களை அளிக்கிறீர்கள். (அச்சு அசலில் Paypal / eBay தளத்தைப் போலவே இருக்கும்) அதில் நீங்கள் அளிக்கும் விவரங்களை
களவாடிக்கொண்டு, உங்களுக்கு பெரிய அளவில் ஒரு ஆப்பு வைத்தால்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
களவாடிக்கொண்டு, உங்களுக்கு பெரிய அளவில் ஒரு ஆப்பு வைத்தால்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
மின்னஞ்சல் சேவையில் பல சிறப்பு வசதிகளை இலவசமாக வழங்கிவரும், கூகிள் (ஜிமெயில்) இதைப் பற்றி சிந்திக்காமல் இருக்குமா?
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது மேற்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்து,
Labs பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கு Authentication icon for verified senders என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
இதை Enable செய்து விட்டால் போதும். இனி ஜிமெயில் Paypal மற்றும் eBay தளங்களைப் போன்ற பெயர்களை தாங்கிவரும் போலி மெயில்களை ஃபில்டர் செய்து விடும்.
தற்சமயம் ஜிமெயில் இந்த வசதியை PayPal மற்றும் eBay கணக்குகளுக்கு மட்டுமே அளித்துள்ளது.
No comments:
Post a Comment