Thursday, June 14, 2012

கூகுளில் புதிய வசதி Account Activity ஆக்டிவேட் செய்ய


இணையத்தில் பெரும்பாலானவர்களின் இதயத்துடிப்பாக இருப்பது கூகுள் நிறுவனம். பயனுள்ள சேவைகளான Blogger, Gmail, Youtube, Adsense இன்னும் பல சேவைகளை இலவசமாக வழங்கி கொண்டுவருவதால் தான் இன்றும் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவுடன் இன்னும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கூகுள் வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளில் Account Activity என்ற புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர். 

நீங்கள் ஒரு மாதத்தில் கூகுள் தயாரிப்புகளை எத்தனை முறை உபயோகித்து உள்ளீர்கள் எதற்க்காக உபயோக படுத்தி உள்ளீர்கள், ஒரு மாதத்தில் எத்தனை மெயில் உங்களுக்கு வந்துள்ளது எத்தனை மெயில் நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்ற முழு அறிக்கையையும் பார்க்க உதவுவது தான் Account Activity என்ற புதிய வசதி இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என பார்ப்போம்.




Account Activity வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
  • முதலில் கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Account Settings ==> Products ==> Go to Account Activity என்பதை க்ளிக் செய்யவும். 

  • கூகுள் பிளஸ் கணக்கு இல்லாதவர்கள் இந்த லிங்கில் google.com/settings/activity க்ளிக் செய்து Account Activity வசதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் Opt in என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • Opt in பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும். அதிகபட்சமாக இரண்டு நிமிடத்தில் உங்கள் அறிக்கை தயாராகிவிடும். இதனை உறுதி படுத்த உங்களுக்கு மெயில் அனுப்புவார்கள். 
  • அந்த மெயிலில் உள்ள லிங்கின் மூலமாகவோ அல்லது Google Plus ==> Account Settings ==> Products ==> Go to Account Activity என்ற இடத்திற்கு சென்று உங்களுடைய ஒரு மாத அறிக்கையை பார்த்து கொள்ளலாம். 
இனி ஒவ்வொரு மாதமும் அறிக்கை தயாரானவுடன் உங்களுக்கு தானாகவே ஈமெயில் வந்து விடும். 

Note : வெப் ஹிஸ்டரியை disable செய்து வைத்து இருந்தால் நீங்கள் தேடிய எண்ணிக்கைகள் இதில் காட்டாது.

No comments:

Post a Comment