சமூக தளங்களில் கோலோச்சு நிற்கும் பேஸ்புக், தனது மொபைல் பயன்பாட்டு கருவியில் தற்போது இந்திய மொழிகளையும் புகுத்தியுள்ளது. இணையதளங்களில் உலவுபவர்களில் பெரும்பாலோனோர் ஃபேஸ்புக்கில் கால் வைக்காமல் நகருவதில்லை... அப்படி அவர் ஃபேஸ்புக் பக்கம் போகவில்லை என்றால் அவர் இணையதளம் பயன்படுத்துவதே வீண் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் புகழ்பெற்று உள்ளது.
பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்களை இணைக்கமுடியும்.
அவர்களிடமிருந்து பல தகவல்கள் பகிர முடியும். அதுமட்டுமல்லாது, பள்ளி, கல்லூரி காலங்களில் பழகிய நண்பர்களையும் ஃபேஸ்புக் மூலம் தேடி கண்டுபிடித்து விடலாம். இது உலகளாவிய பரப்பில் இயங்குவதால் பன்னாட்டு தகவல் பரிமாற்றம் என்பது நண்பர்கள் வழியாகவும், நண்பர்களின் நண்பர்கள் வாயிலாகவும் நடைபெறுகிறது. இது தான் இங்கு சிறப்பம்சமும் கூட...
இன்றைக்கு பிரபல நிறுவனங்கள், அமைப்புகள், பிரபலமான மனிதர்கள் இந்த சமூக தளத்தை பயன்படுத்துவதால், அவர்களுடனான கலந்துரையாடலும் எளிதாக நிகழ்கிறது.
இந்த ஃபேஸ்புக் இணையதளம் கணினி திரையில் மட்டுமல்லாது, எல்லோருடைய செல்பேசி திரைக்கும் வந்துறங்கியுள்ளது.
இதனால், இடைவிடாத அரட்டை, தகவல் பரிமாற்றம் நண்பர்களிடையே நடக்கிறது.
இதற்காக ஃபேஸ்புக் - மொபைல் பயன்பாட்டு கருவியையும் தருகிறது.
அதனை பயன்படுத்துவோரால் இந்திய மொழிகளில் பார்க்க முடியாது என்பது குறையாக இருந்தது.
தற்போது, அந்த குறையை நீக்கியுள்ளது ஃபேஸ்புக்.
அதன்படி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஏற்கனவே இருந்தாலும், தமிழ், மலையாளம், குஜராத்தி, கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயன்பாட்டு கருவிகளை வழங்க உள்ளது.
அமெரிக்காவை அடுத்து அதிக பேஸ்புக் பயனர்களை கொண்ட நாடு இந்தியா தான் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment