விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்குதளங்களில் விண்டோஸ் XP யில் உள்ளது போல Administrator கணக்கு இல்லையே என்று பலரும் யோசித்திருக்கக் கூடும். இந்த இயங்குதளங்களிலும் Administrator கணக்கு வழக்கம் போல உண்டு. ஆனால் மறைக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை உங்கள் கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இந்த Administrator கணக்கில் நுழைந்து சரி செய்து விடலாம் என்று சிந்திக்கும் பொழுது, இந்த கணக்கை எப்படி enable செய்வது என்று பார்க்கலாம்.
வழக்கம் போல உங்கள் விண்டோஸ் பயனர் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள். search box இல் CMD என டைப் செய்து மேலே தோன்றும் Command Prompt லிங்கில் வலது க்ளிக் செய்து Run as Administrator க்ளிக் செய்து Command prompt சென்று விடுங்கள்.
இங்கு net user administrator /active:yes என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
டைப் செய்யும் பொழுது சரியான space ஆகியவற்றை கவனித்து மேலே தரப்பட்டுள்ளது போல உள்ளீடு செய்யவும். The command completed successfully என்ற செய்தி வருவதை கவனிக்கவும். இப்பொழுது ஒருமுறை Logout செய்து பின்னர் வரும்பொழுது இந்த Administrator கணக்கும் திரையில் தோன்றுவதை கவனிக்கலாம். பெரும்பாலும் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் ஏதும் இருப்பதில்லை.
இந்த வசதியை இப்படியே தொடர்வதாக இருந்தால் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் இட்டு வைப்பது நல்லது. அல்லது உங்கள் வேலை முடிந்த பிறகு, இந்த கணக்கை மறுபடி பழையபடி மறைத்து வைக்க மேலே சொன்ன வழிமுறையின்படி சென்று net user administrator /active:no எனும் கட்டளையை கொடுத்துவிடலாம்.
இதே net user கட்டளையை பயன்படுத்தி விண்டோஸ் XP யில் மற்றொரு admin rights உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம். (பழைய கடவுச்சொல் நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை)
No comments:
Post a Comment