Sunday, June 24, 2012

ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க



பெரும்பாலானவர்கள் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட மெயில் கணக்கை வைத்திருப்போம். ஒன்று பொதுவாகவும் ஒன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் மற்றும் அவரவரின் தனி தனி தேவைகளுக்கு என்று நாம் தனி தனியாக வைத்து கொள்வோம். அப்படி வைத்திருக்கும் போது நாம் ஒரு மெயிலை பார்த்து கொண்டிருப்போம் அடுத்து  மெயில் முகவரியில் பார்க்க வேண்டுமென்றால்




அந்த ஐடியில் உள்ளே புகுந்து தான் பார்க்க வேண்டும். அல்லது Multiple SignIn வசதியை பயன் படுத்தி பார்க்க வேண்டும். இனி நீங்கள் அதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. உங்களுடைய மற்றொரு மெயில் முகவரிக்கு வரும் மெயிலின் காப்பியை உங்கள் மெயில் ஐடிக்கு வரவைத்து கொள்ளலாம். 

பயன்கள்: 
  • இந்த வசதி மூலம் நாம் ஒவ்வொரு முறையும் மற்ற மெயில் கணக்குகளில் நுழைய வேண்டியதில்லை.
  • இதன் மூலம் ஐந்து மெயில் ஐடிகளை சேர்த்து கொள்ளலாம்.
  • உங்களுக்கு வரும் மெயிலின் காப்பியை தனி லேபிளாக உருவாக்கலாம்.
  • இதில் இன்னொரு அற்ப்புதமான வசதி என்னவென்றால் போது மெயில் ஐடியில் இருந்து கொண்டே நீங்கள் மற்ற மெயில் ஐடிக்களில் மெயில் அனுப்பலாம். இந்த வசதி அனைவருக்கும் மிகவும் பயன் படக்கூடிய வசதி பயன் படுத்தி பாருங்கள்.
  • இதற்கு உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.  
  • அடுத்து Settings பகுதிக்கு க்ளிக் செய்யுங்கள். இது உங்கள் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் காணப்படும்.
  • அடுத்து Account and Imports க்ளிக் செய்யுங்கள்.  

  • Add POP3 email Account என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் மெயில் காப்பி பெற விரும்பும் ஜிமெயில் ஐடியை கொடுக்கவும்.
  • கொடுத்த பின் Next Step என்ற பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் password என்ற இடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மெயில் ஐடியின் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.
  • அடுத்து Label incoming messages என்ற இடத்தில் டிக் குறியிடவும்.
  • அடுத்து கீழே உள்ள Add Account என்ற பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அவ்வளவு தான் இனி அந்த மெயில் ஐடிக்கு வரும் மெயிலின் காப்பி உங்கள் போது மெயில் ஐடிக்கும் வரும். 
  • அடுத்து நீங்கள் மற்ற மெயில் ஐடியில் கணக்கில் இருந்து மெயில் அனுப்ப Next step enbadhai க்ளிக் செய்யவும். 
  • அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பெயரை கொடுத் Next Step என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து Send Verification என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் சேர்த்த மெயில் ஐடிக்குள் நுழைந்து உங்களுக்கு வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் மெயிலை ஓபன் செய்து அதில் உள்ள Verification Link மீது க்ளிக் செய்யவும்.


  • க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு Confirmation Success என்ற செய்தி வரும் இனி நீங்கள் ஒரே இமெயில் ஐடியில் இருந்து கொண்டே மற்ற மெயில் ஐடிக்களில் மெயிலும் அனுப்பலாம்.
  • இதற்கு எப்பவும் போல Compose மோடில் செல்லுங்கள். 
  • முதலில் From என்று ஒரு பகுதி இருக்கும். இதில் க்ளிக் செய்தால் நீங்கள் சேர்த்த மற்ற மெயில் ஐடிக்களும் தெரியும்.
  •  அதில் உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து கொண்டு மெயில் அனுப்புங்கள் அவ்வளவு தான்.  

No comments:

Post a Comment