தொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை Shutdown செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா?Hybernate ஆகவேண்டுமா? Shut down ஆக வேண்டுமா? அல்லது எதுவுமே ஆகக் கூடாதா? இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
விண்டோஸ் Taskbar - System Tray இல் உள்ள Battery ஐகானை வலது க்ளிக் செய்து Power Options லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள Choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் When I close the lid என்பதற்கு நேராக உள்ள Drop down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் Sleep வசதியே உகந்தது, சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் Do nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment