Thursday, June 14, 2012

புதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் புள்ளிவிவரங்கள்(Stats) அறிய


கூகுளின் பல பயனுள்ள தயாரிப்புகளில் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவோடு இயங்குவது ஜிமெயில் எனும் இலவச மெயில் சேவையாகும். இலவசம் என்பதாலும், பல பயனுள்ள வசதிகள் இருப்பதாலும் பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம்.






செயல்படுத்துவது எப்படி: 
  • முதலில் உங்களின் Google Docs கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Create என்பதை க்ளிக் செய்து அதில் Spread Sheet தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து Spread Sheet ஓபன் ஆகியவுடன் அதன் பெயரை Gmail Stats என்று மாற்றி கொண்டு Tools ==> Script Gallery என்பதை க்ளிக் செய்யவும். 


  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் அங்கு இருக்கும் சர்ச் பாக்ஸில் Gmail Meter என கொடுத்து தேடினால் ஒரு வசதி வந்திருக்கும் அதில் உள்ள Install பட்டனை அழுத்தி நிரலை இன்ஸ்டால் செய்யவும். 

  • அடுத்து வரும் விண்டோவில் Authorize என்ற பட்டனை க்ளிக் செய்யவும். பிறகு Grant Access என்பதை க்ளிக் செய்தால் Gmail Meter வசதி கூகுள் டாக்ஸில் சேர்ந்து விடும். 
  • இப்பொழுது Spread Sheet திறந்து அதில் உள்ள Gmail Meter என்பதை க்ளிக் செய்து Get Report என்பதை க்ளிக் செய்யவும். இன்னொரு விண்டோ வரும் Monthly Report என்பதை க்ளிக் செய்தால் ஒரு மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் வரும். அல்லது Custom என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான தேதிகளை தேர்வு செய்து கொள்ளவும். 

  • உங்களுடைய ரிப்போர்ட் ரெடியாகியவுடன் உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பப்படும். இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து உங்களுடைய ரிப்போர்ட் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
மேலும் சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 




கீழே உள்ள பதிவில் உள்ள வழிமுறையை பயன்படுத்தியும் ஜிமெயில் புள்ளி விவரங்களை சுலபமாக பெறலாம். 

கூகுளில் புதிய வசதி Account Activity ஆக்டிவேட் செய்ய

No comments:

Post a Comment