Thursday, June 14, 2012

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?



அனைவருக்கும் தங்களது Photos மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.


ஆனால் ஒரு சில Photo அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட Photo-களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு Software நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் Software- களில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.


அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளது தான் போட்டோசைன் என்ற Software ஆகும். இந்த Software பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக Photo எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  Photo-களை இந்த Software-ன் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த Software இணையத்தில் இருந்து Download செய்ய வேண்டும். இந்த Software-து இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.
இந்த Software-னது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment