பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும். ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்?
எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே? என்ற கேள்விகளுடன் இயங்குகிறார்கள். ஒரு சிலர், ஆபீஸ் 2003 தொகுப்பே போதும் என அதற்கு மாறிக் கொள்கிறார்கள். இப்போது வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பில், ரிப்பன் இன்டர்பேஸ் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் பழைய படி மெனு எதிர்பார்ப்பவர்கள் அதிக பிரச்னையைச் சந்திக்கின்றனர். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதே என கவலைப்படுகின்றனர்.
இவர்களின் சிரமத்தினைப் போக்கும் வகையில், பழைய எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் எப்படி மெனு இருந்ததோ, அதே போல வசதியினை எம்.எஸ். ஆபீஸ் 2010லும் கிடைக்கச் செய்திட வழி கிடைத்துள்ளது. BitMenu für Office 2007 / 2010 und Outlook 2010 என்ற புரோகிராம் இதற்கான தீர்வைத் தருகிறது. புதிய தொகுப்பில் உள்ள ரிப்பன் இன்டர்பேஸ் வசதியுடன், பழைய வகை மெனுக்களையும், டூல் பார்களையும் தருகிறது. கூடுதலாக நாம் எண்ணும் அனைத்து ரிப்பன் இன்டர் பேஸ் வகை அனைத்தையும் நீக்கிவிடலாம். இதற்கான புரோகிராம் இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.
புரோகிராம் ஒன்றினை எப்படி தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவோமோ அதன் படி யுபிட் மெனுவினையும் அமைத்துக் கொள்ளவும். இது மிகவும் சிறிய புரோகிராம். இன்ஸ்டால் செய்திட மிகக் குறுகிய நேரமே எடுத்துக் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் அனைத்து எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களையும் மூடிவிடுங்கள். ஒன்று கூட இயங்கக் கூடாது. இன்ஸ்டால் செய்த பின்னர், வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் என ஏதேனும் ஒரு புரோகிராமினை இயக்கவும். ரிப்பனில், Home மெனு அடுத்து புதிய மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம். இந்த மெனு மூலம், உங்கள் பழைய ஆபீஸ் 2003 தொகுப்பில் கிடைத்த மெனு, கட்டளைகள் அனைத்தும் கிடைப்பதனைப் பார்க்கலாம், பயன்படுத்தலாம். புதிய தொகுப்பில் தரப்பட்டுள்ள SmartArt போன்ற வசதிகளும், இந்த வகை மெனு வில் காட்டப்படுவதனைக் காணலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து இயக்கினால், புதிய PivotTable மற்றும் PivotCharts ஆகியவற்றிற்கான சப்போர்ட் இருப்பதையும் பார்க்கலாம். ஒரு வித்தியாசம் இங்கு தென்படும். அனைத்து டூல் பார்களும் ஒரு கீழ்விரி மெனுவிற்குள் சுருக்கமாக அடைபட்டிருக்கும். இதனால், உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசன் மிகவும் குறைவாக செட் செய்தவர்களுக்கு, இதன் தோற்றத்தைச் சற்று வித்தியாசமாகக் காண்பார்கள். இதனைச் சற்றுப் பெரிதான தோற்றத்தில் இருக்குமாறு விரும்புவார் கள்.
இதற்கு Menu டேப்பில், Tools தேர்ந்தெடுத்து, பின்னர் Word Options தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள பாரில், Customize Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, வலது பக்கம் நீங்கள் மறைக்க விரும்பும் அனைத்து வசதிகளுக்கும் எதிரே உள்ள கட்டங்களில் டிக் அடையாளத்தினை நீக்கி விடவும். இவற்றை முடித்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த வேலை நடைபெறும் போதே, இன்டர்பேஸ் வண்ணத்தினையும் மாற்றலாம். ஆனால் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் எந்த புரோகிராமில் (வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட்) வண்ண மாற்றத்தினை ஏற்படுத்தினாலும், அந்த மாற்றங்கள் மற்ற புரோகிராம்களிலும் காட்டப்படும்.
இப்போது ரிப்பனில் இரண்டு டேப்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். புதிய தோற்றத்தைக் காட்ட File டேப்; அடுத்து தற்போது இன்ஸ்டால் செய்த யுபிட் மெனு டேப். இதில் கிட்டத்தட்ட பழைய ஆபீஸ் 2003 தொகுப்பின் அனைத்து மெனுக்களும் இருப்பதனைக் காணலாம். இந்த மெனு மூலம் புதிய ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து வசதிகளையும் பெறலாம் என்பது இதன் சிறப்பு.
இது போன்ற செட்டிங்ஸ் மாற்றத்தினை, வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் என அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்களை ஆபீஸ் 2007 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம். தனிநபர் பயன்பாட்டிற்கு யுபிட் மெனு இலவசமாகக் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, இதனை கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.
No comments:
Post a Comment