விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா இயங்குதளங்களை உபயோகிப்பவர்கள் தாங்கள் நிறுவியுள்ள பல அப்ளிகேஷன்கள், யுடிலிடிக்கள் ஆகியவற்றை முழுமையான வசதிகளுடன் பயன் படுத்த Administrator mode -இல் இவற்றை இயக்க வேண்டியுள்ளது.
இப்படியான ப்ரோகிராம்களை ஒவ்வொரு முறையும், Run as Administrator என கொடுத்து திறப்பதற்கு பதிலாக, அந்த ப்ரோகிராம்களின் Shortcut -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். Shortcut பக்கத்தில் உள்ள Advanced
பொத்தானை அழுத்துங்கள்.
பொத்தானை அழுத்துங்கள்.
இனி திறக்கும் Advanced Properties வசனப் பெட்டியில் “Run as administrator” என்ற செக் பாக்ஸை டிக் செய்து OK கொடுங்கள்.
இதற்கு மேல் அந்த குறிப்பிட்ட ப்ரோகிராமை திறக்கையில் Administrator mode லேயே திறக்கும்.
No comments:
Post a Comment