Thursday, June 21, 2012

ஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர



பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும். கூகுளுக்கு நிறைய கிளை தளங்கள் இருப்பதால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு விஷயத்துக்கு வருவோம். நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயிலையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும் ஆனால் பேஸ்புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணைத்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.


  • பேஸ்புக் தளத்தை திறக்காமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.
  • உங்கள் அலுவலகத்தில் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டிருந்தாலும் இது வேலை செய்யும்.
  • ஜிமெயிலில் இருந்தே நண்பர்களின் பதிவிற்கு கருத்துரைகள் இடலாம். நம் விருப்பங்களையும் தெரிவிக்கலாம்.
  • இந்த வசதிகளை உங்கள் ஜிமெயில் கணக்கிலும் கொண்டு வர முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Settings - Labs க்ளிக் செய்யவும் உங்களுக்கு வரும் விண்டோவில் Enabled Labs பகுதியில் Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • மேலே செய்த மாற்றத்தை சேமித்தவுடன் அடுத்து Gadget டேபை க்ளிக் செய்யவும். 
  • அங்கு வந்திருக்கும் விண்டோவில் கீழே உள்ள URL காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml

  • URL பேஸ்ட் செய்தவுடன் அதற்கு அருகே உள்ள Add என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும் பேஸ்புக் உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்ந்துவிடும். 
  • இப்பொழுது நீங்கள் ஜிமெயிலை Refresh செய்யுங்கள். இப்பொழுது ஜிமெயிலின் Chat பகுதிக்கு கீழே பாருங்கள் பேஸ்புக் விட்ஜெட் சேர்ந்து இருக்கும். அதில் உள்ள Expand என்பதை க்ளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் அதில் Allow என்பதை கொடுத்து விட்டு பின்பு உங்கள் பேஸ்புக் ID, Password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் பேஸ்புக் கணக்கை ஜிமெயிலிலே திறந்து பார்க்கலாம். 

No comments:

Post a Comment