Monday, June 18, 2012

ஜிமெயிலில் புதிய பயனுள்ள சூப்பர் வசதி - People Widget



ஜிமெயில் இன்று உலகின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மெயில் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான்  இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுக படுதிள்ளது இந்த ஜிமெயில் நிறுவனம்.

  • இனி உங்களுக்கு வரும் மெயில்களை ஓபன் செய்தால் அந்த மெயிலின் வலது பக்கத்தில் people widget என்ற புதிய பகுதி இருப்பதை பாருங்கள்.
  • அந்த வலது பக்கத்தில் பாருங்கள் அனுப்பியவரின் முகத்துடன் சேர்ந்து ஒரு விட்ஜெட் வந்திருக்கும். 
  • முகமட்டுமின்றி அவர் கடைசியாக நமக்கு அனுப்பிய மெயில் மற்றும் அவர் கூகுள் பஸ்ஸில் போஸ்ட் செய்திருந்தால் அதன் இணைப்பு போன்ற விவரங்கள் வரும்.
  • அதில் உள்ள chat பட்டனை க்ளிக் செய்தால் chat window ஓபன் ஆகும். 
  • அருகில் உள்ள email பட்டனை அழுத்தினால் compose mail பகுதி வரும். 
  • Voice Call பட்டனும் இதில் இருக்கும். 
  • இந்த வசதிகள் ஏற்கனவே ஜிமெயில் இருந்தாலும் ஒவ்வொன்றாக தனிதனி இடங்களில் இருந்தது அவை அனைத்தையும் ஒரே இடத்தில கொடுத்து இருப்பதால் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

இந்த வசதி பல ஈமெயில் முகவரிகளில் இன்னும் வரவில்லை இரண்டு வாரத்திற்குள் அனைத்து ஈமெயில் முகவரிக்கும் வந்துவிடும் என்று ஜிமெயில் பிளாக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment