பல கணினிகளில் Administrator மற்றும் தனித்தனியாக லிமிடெட் User கணக்குகள் இருப்பது வழக்கம். ஒருவேளை நீங்கள் அந்த கணினியின் Administrator ஆக உள்ளீர்கள். அந்த கணினியை பயன்படுத்தும் மற்ற பயனாளர்கள், அதில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகள் அனைத்தையும் பயன்படுத்தாமல், நீங்கள் அனுமதி அளிக்கும் பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்தும்படி உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் என்ன மாறுதல் செய்ய வேண்டும் என்பதை பார்க்க்கலாம்.
Start menu வில் Run (விண்டோஸ் 7 /விஸ்டா வில் search box) gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது Local Group Policy Editor விண்டோ திறக்கும்.
இதன் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> System என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இனி வலதுபுற பேனில் உள்ள Run only allowed Windows applications என்பதை இரட்டை க்ளிக் செய்யுங்கள்.
இந்த திரையில் enabled என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி கீழே உள்ள பெட்டியில் உள்ள Show பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Show Contents வசனப் பெட்டியில் Add பொத்தானை அழுத்தி தேவையான அப்ப்ளிகேஷங்களின் EXE கோப்பின் பெயர்களை ஒவ்வொன்றாக கொடுத்து பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு OK கொடுத்து சேமித்து koLLungaL. அவ்வளவுதான். இனி உங்கள் கணினியில் மற்ற பயனாளர்கள், நீங்கள் அனுமதி அளித்துள்ள அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்து இயலும்.
நண்பர் எசாலத்தான்!
தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்..
நான் இந்த கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளது போல, நீங்கள் அந்த கணினியின் administrator ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் அந்த லிஸ்டில் gpedit.msc, ஐ சேர்க்காத பொழுது, உங்களுக்கு மறுபடியும் சரிசெய்யும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.. உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து F8 கீயை அழுத்தி safemode இல் சென்று Administrator கணக்கில் நுழைந்து கொண்டு, ரன் கட்டளையில் gpedit.msc கொடுத்து மறுபடியும் disable செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment