பொதுவாக நாம் ஜிமெயிலில் ஏதேனும் மெயிலை delete செய்தாலோ அல்லது archive செய்தாலோ நம்முடைய விண்டோ திரும்பவும் முகப்பு பக்கத்துக்கே(inbox) சென்று விடும் நாம் திரும்பவும் மெயிலை க்ளிக் செய்து தான் நாம் அடுத்த மெயிலை delete மற்றும் archive செய்ய முடியும். இனி அது போல் செல்ல வேண்டியதில்லை நாம் ஒரு மெயிலை delete செய்தால் நம் விண்டோ இன்பாக்ஸ்க்கு செல்லாமல் அட்டோமேடிக்காக அடுத்த மெயில் ஓபன் ஆகியிருக்கும்.
இந்த வசதி ஏற்கனவே யாகூவில் உள்ளது.
இப்பொழுது ஜிமெயிலிலும் இந்த வசதியை புகுத்தி உள்ளனர்.
இந்த வசதி ஏற்கனவே யாகூவில் உள்ளது.
இப்பொழுது ஜிமெயிலிலும் இந்த வசதியை புகுத்தி உள்ளனர்.
- இந்த வசதியை பெற முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Settings - Labs - Auto advance என்ற வசதியில் உள்ள enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்து விடுங்கள்.
- திரும்பவும் Settings சென்று General பகுதியில் இருக்கும் auto advance வசதியை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொண்டு கீழே உள்ள Save Changes பட்டனை அழுத்தி நீங்கள் மாற்றியதை சேமித்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது ஏதேனும் மெயிலை அழித்தோ அல்லது அர்ச்சிவ் செய்தோ பாருங்கள் உங்களுக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியும்.
No comments:
Post a Comment