Monday, June 4, 2012

மின்னஞ்சல்களை மவுசை கொண்டு கட்டுப்படுத்தும் கூகுளின் புதிய முறை




1997 காலப்பகுதியில் அறிமுகமாகி மின்னஞ்சல் துறையில் கொடிகட்டிப்பறந்த யாகூ நிறுவனத்தை அதன் பின் தோன்றிய கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணங்களாக, விரைவான சேவையும், 7.6GB வரையிலான சேமிப்பு வசதி வழங்குகின்றமையும் ஆகும்.
இவை தவிர பல்வேறு புதிய அம்சங்களையும் நாளுக்கு நாள்
அறிமுகப்படுத்தி வருகின்றது. இதனடிப்படையில் இன்பொக்சில் காணப்படும் மின்னஞ்சல்களை மவுஸ் கொண்டு கட்டுப்படுத்தும் வசதியும் காணப்படுகின்றது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுக
1. Mail Settings பகுதிக்கு செல்க.
2. தோன்றும் வின்டோவில் Labs என்பதை தெரிவு செய்க.
3.பின் அதில் காணப்படும் தேடுதலுக்கான பகுதியில் Mouse Gesture என தட்டச்சு செய்து தேடுக.
4.பின் Mouse Gesture என்பதை Enable செய்க.
இப்போது உங்கள் இன்பொக்சில் உள்ள ஒரு மின்னஞ்சலை  திறந்து பின் மற்ற மின்னஞ்சல்களுக்கு செல்வதற்கு கிளிக் செய்து மவு​ஸை வலது, இடது பக்கங்களிற்கு அசைப்பதன் மூலம் மின்னஞ்சல்களை கையாள முடியும்.

No comments:

Post a Comment